Educational Assistance
ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.
Educational Assistance
புறநானூற்றில் கல்வியின் சிறப்பை பறைசாற்றும் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனின் பாடலான
உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே
எனும் வாக்கினிற்கேற்ப.
கல்விக்கு முக்கியத்துவம் தந்த நமது முன்னோர்களான வள்ளல் அழகப்பசெட்டியார், இராஜா அண்ணாமலை செட்டியார், தியாகராஜன் செட்டியார், மு.சி. த சிதம்பரம் செட்டியார் வழியில்,
நமது இனத்தின் வளரும் தலைமுறையினரின் கல்விக்கு சிறு உதவியென நமது பஹ்ரைன் நகரத்தார் சமூகமும் உதவி செய்து வருகிறது.
The educational assistance form should be duly filled and mailed to Contact@bahrainnagarathar.com along with the prerequisite documents.
